நாற்றுக்களை சேதப்படுத்தும் குதிரைகளால் நெற்பயிர் விளைச்சல் பாதிப்பு

நாற்றுக்களை சேதப்படுத்தும் குதிரைகளால் நெற்பயிர் விளைச்சல் பாதிப்பு
X

கோட்டைமேடு பகுதியில் நாற்றுக்களை சேதப்படுத்தும் குதிரைகள்.

குமாரபாளையத்தில் நாற்றுக்களை சேதப்படுத்தும் குதிரைகளால் நெற்பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டுள்ளதால் அனைத்து பகுதியிலும் நெல் நடவு பணிகள் துவங்கியுள்ளன. பல இடங்களில் நாற்றுக்கள் விட்டுள்ளனர். குமாரபாளையம் கோட்டைமேடு பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெற்பயிர் பயிரிட நாற்றுக்கள் விட்டுள்ளனர். குறிப்பிட்ட கால வளர்ச்சிக்குப் பின்னர் இந்த நாற்றுகள் விவசாய நிலங்களில் நடவு செய்யப்படும்.

குறிப்பிட்ட அளவு வளர்ச்சி பெற்ற நாற்றுகள் நடவு செய்யத் தயாராக இருந்த நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த குதிரைகள் இரவு மற்றும் பகல் நேரங்களில் நாற்றுகளை உண்டு சேதப்படுத்தியுள்ளன. வாய்க்காலில் 137 நாட்கள் மட்டுமே தண்ணீர் வரும் என்ற நிலையில், இனி நாற்று விட்டு, அது வளர்ந்து நடவு செய்து பயிர் வளரும் வரையில் வாய்க்காலில் தண்ணீர் வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனால் பல நூறு ஏக்கர் நிலங்களில் நெற்பயிர் நடவு செய்யவிருந்த நிலையில் இது போல் நாற்றுகளைக் குதிரைகள் சேதப்படுத்தியதால், நெற்பயிர் நடவு செய்யும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil