குமாரபாளையத்தில் சாலையில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் அச்சம்

குமாரபாளையத்தில் சாலையில் திரியும் மாடுகளால்   பொதுமக்கள் அச்சம்
X

குமாரபாளையம் மேற்கு காலனி பகுதியில் அதிக அளவில் சுற்றித்திரியும் மாடுகள்.

குமாரபாளையத்தில் சாலையில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குமாரபாளையம் மேற்கு காலனி, தெற்கு காலனி பகுதி சாலைகளில் அதிக அளவில் மாடுகள் சுற்றித்திரிந்து வருகின்றன. இவைகளின் உரிமையாளர்கள் கூட இல்லாததால், சாலைகளில் இடையூறாக உள்ள மாடுகளை பொதுமக்கள் விரட்ட முயற்சித்தால் அவைகள் முட்ட வருகின்றன.

மாடுகள் முட்டியதில் பலரும் காயமடைந்துள்ளனர். நகராட்சி நடுநிலைப்பள்ளியும் இதே பகுதியில் உள்ளதால், வீதியில் விளையாடும் குழந்தைகளையும் மாடுகள் விரட்டுவதால் காயமடைகின்றனர்.

விசைத்தறி கூடங்கள், ஸ்பின்னிங் தொழிற்கூடங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் இந்த பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகம். வாகன போக்குவரத்தும் மிகுந்த பகுதியாகும்.

எனவே சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் அசம்பாவிதம் ஏற்படும் முன், நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai and business intelligence