பள்ளிபாளையம் சாலைகளில் 'பறக்கும்' பஸ்கள் - பொதுமக்கள் குதூகலம்

பள்ளிபாளையம் சாலைகளில் பறக்கும் பஸ்கள் - பொதுமக்கள் குதூகலம்
X

தொலைதூரப் பேருந்து ஒன்று, பள்ளிபாளையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்கிறது.

பொதுப்போக்குவரத்து தொடங்கியதால், பள்ளிபாளையம் சாலைகளில் பஸ்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள், ஊரடங்கு தளர்வால் இன்று முதல் இயங்கத் தொடங்கிவிட்டன. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தப்பகுதியில் இன்று காலை பள்ளிபாளையம் நகராட்சி ஊழியர்கள் பேருந்துகளுக்கு கிருமிநாசினி மருந்துகள் தெளித்தனர்.அதன் பிறகு பயணிகள் போக்குவரத்து தொடங்கியது.

கணிசமான எண்ணிக்கையில் உள்ளூர் மற்றும் தொலைதூர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் கொரோனா பரவல் காரணமாக பேருந்துகள் இயக்கப்படாததால், அருகிலுள்ள ஈரோடு, திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட இடங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த பொதுமக்கள், மீண்டும் பேருந்துகளை பார்த்ததும், இனிமேல் தடையின்றி வேலைக்கு செல்லலாம் என்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த இரு மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட பள்ளிபாளையம் சாலைகள், மீண்டும் பேருந்துகள், வாகனங்களின் நடமாட்டத்தால் பரபரப்பாக உள்ளன.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!