குமாரபாளையத்தில் நீண்ட நேரமாகியும் எடுக்காத பஸ்: பயணிகள், ஓட்டுநர்கள் அவதி

குமாரபாளையத்தில் நீண்ட நேரமாகியும் எடுக்காத பஸ்: பயணிகள், ஓட்டுநர்கள் அவதி
X

குமாரபாளையத்தில் ஒரு மணி நேரம் தாமதமாகியும் அரசு பஸ் எடுக்காத ஓட்டுனரால் பயணிகள், இதர பஸ் ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகினர்.

குமாரபாளையத்தில் நீண்ட நேரமாகியும் எடுக்காத பேருந்தால் அங்கிருந்த பயணிகள், மற்ற பேருந்து ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகினர்.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று இரவு 8.25க்கு எடுக்க வேண்டிய கே.2 எனும் டி.என்.33 என் 2691 பதிவு எண் கொண்ட ஈரோடு செல்லும் அரசு டவுன் பஸ் 09:30 ஆகியும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

பயணிகள் கேட்டதற்கு, பின்னால் பஸ் வரும் அதில் செல்லுங்கள், என ஓட்டுநர் கூறியதால், பயணிகள் அதிருப்தியடைந்தனர். வேலைக்கு சென்று வீட்டிற்கு செல்லும் தொழிலாளர்கள், டியூசன் சென்று விட்டு வீடு திரும்பும் மாணவர்கள், உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு வந்தவர்கள் என ஏராளமானோர் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தனர். இதற்கு பின்னால் வந்த பஸ்கள் , இந்த பஸ் செல்லாததால் அவர்களும் காத்திருந்தனர்.

இது பற்றி இதர ஓட்டுநர்கள், கண்டக்டர்கள் கூறுகையில், இந்த டி.என்.33 என் 2691 பஸ் ஓட்டுனர் தினமும் இதே போல் செய்து வருவதால், பயணிகள் மற்றும் எங்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. இது பற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டி.என்.33 என் 2691 பஸ் ஓட்டுநர் கூறுகையில், ஈரோட்டில் அதிக டிராபிக் இருந்ததால் தாமதமாகத்தான் வந்தேன் என கூறினார்.

மற்றொரு ஓட்டுநர் கூறுகையில், மாலை 06:00 மணியளவில் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஈரோடு சூரம்பட்டிவலசு வரை 3 பஸ்கள் சென்று வர சொல்கிறார்கள். கடும் டிராபிக், மற்றும் குறுகிய சிங்கிள் ரோடு, இதில் போய் வருவது பெரும் சிரமமாக உள்ளது. இதில் 2 மட்டும் சூரம்பட்டிவலசு வரையும், மற்றொரு பஸ் ரயில்வே ஸ்டேஷன் வரையிலும் சென்று வர சொன்னால் இந்த சிரமத்தை தவிர்க்கலாம், என்று கூறினார்.

எனவே அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்து பயணிகளின் சிரமத்தை தவிர்க்க வேண்டும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!