அண்ணன், தம்பி கை கலப்பு தம்பி கைது

அண்ணன், தம்பி கை கலப்பு   தம்பி  கைது
X
குமாரபாளையத்தில் அண்ணன், தம்பி கை கலப்பு சம்பவத்தில் தம்பி கைது செய்யப்பட்டார்.

அண்ணன், தம்பி கை கலப்பு

தம்பி கைது


குமாரபாளையத்தில் அண்ணன், தம்பி கை கலப்பு சம்பவத்தில் தம்பி கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையம், கோனக்காடு பகுதியில் வசிப்பவர் நடராஜன், 62. விவசாயி. இதே பகுதியில் வசிக்கும் அன்பு, 55, இவரது தம்பி ஆவார். அன்பு, தன் பெற்றோர்களுக்கு சாப்பாடு செலவுக்கு கூட பணம் தராததால், இவரது பெற்றோர், தங்களுக்கு சொந்தமான நிலத்தை நடராஜன் பெயரில் எழுதி வைத்து விட்டனர். ஏப். 5, மாலை 05:45 மணியளவில், இந்த நிலத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என, அன்பு தகராறு செய்து, நடராஜனை தகாத வார்த்தையால் திட்டியதுடன், இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமைடந்த நடராஜன், சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து நடராஜன் குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, போலீசார் வழக்குப்பதிவு செய்து, அன்புவை கைது செய்தனர்.

Next Story