குடும்ப தகராறில் தம்பியை கல்லால் அடித்துக்கொலை: அண்ணன்கள் கைது

குடும்ப தகராறில் தம்பியை கல்லால் அடித்துக்கொலை: அண்ணன்கள் கைது
X

பைல் படம்.

குமாரபாளையத்தில் குடும்ப தகராறு காரணமாக தம்பியை கல்லால் அடித்துக்கொலை செய்த அண்ணன்களை போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் வசிப்பவர் ஆனந்தன், 60. இவருக்கு அசோக்குமார், 38, கார்த்திகேயன், 36, குருதேவன், 34 இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி அண்ணன், தம்பிக்குள் சண்டை வருவதாக தெரிகிறது. நேற்று மாலை 05:30 மணியளவில் இவர்களது வீட்டில் தகறாறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அண்ணன்கள் அசோக்குமார், கார்த்திகேயன் இருவரும் தம்பி குருதேவனை கல்லால் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே குருதேவன் உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி, கொலை செய்த இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!