பள்ளிபாளையம் அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை முயற்சி

பள்ளிபாளையம் அருகே கோவில் உண்டியல் உடைத்து   கொள்ளை முயற்சி
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

பள்ளிபாளையம் அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது.

பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம், பாரதி நகர், மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் மாசி திருவிழாவிற்கு இந்த கோவில் உண்டியல் பணம் பயன்படுத்துவது வழக்கம் என கூறப்படுகிறது.

நேற்றுமுன்தினம் இரவு கிரில் கேட் உடைத்து உள்ளே சென்று உண்டியலை மர்ம நபர்கள் திருடி சென்று, அருகில் உள்ள அப்பநாயக்கன்பாளையம் மயானத்திற்கு கொண்டு சென்று , உடைத்து அதில் இருந்த ரூபாய் நோட்டுக்களை மட்டும் எடுத்து சென்றுள்ளனர். நாணயங்கள் உண்டியலில் அப்படியே இருந்தன.

இது குறித்து அப்பகுதி மக்கள் கோவில் தர்மகர்த்தா கணேசனுக்கு தகவல் தர, அவர் பள்ளிபாளையம் போலீசில் புகார் செய்தார். உண்டியலில் ரொக்கம் 6 ஆயிரம் இருந்திருக்கும் என கூறப்படுகிறது. பள்ளிபாளைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!