குமாரபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு

குமாரபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு
X

திருட்டு நடைபெற்ற வீடு.

குமாரபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

குமாரபாளையம் அருகே அல்லிநாயக்கன் பாளையத்தில் வசிப்பவர் காளியப்பன், 54. பிரிண்டிங் பிரஸ் தொழில் செய்து வருகிறார்.

காளியப்பன் தனது குடும்பத்தினர் அனைவருடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றுவிட்டார். வேலை முடிந்து இரவு 09.00 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

யாரும் இல்லை என்று அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பணம் 70,000 மூன்றரை பவுன் நகையை திருடிச் சென்று விட்டனர். இது குறித்து வெப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!