குமாரபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு

குமாரபாளையத்தில் கொள்ளை நடந்த வீடு.
குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை எதிர்மேடு டீச்சர்ஸ் காலனி பகுதியில் வசிப்பவர்கள் சுரேஸ், 29, கவிதா, 26. சுரேஸ் தனியார் நிறுவன பணியாளர். கவிதாவிற்கு உடல்நலம் சரியில்லாததால், காஞ்சிக்கோவிலில் உள்ள கவிதாவின் பெற்றோர் வீட்டிற்கு நவ. 28ல் சென்றனர்.
அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று காலை 07:00 மணியளவில் வீடு திரும்பினர். வந்து பார்த்த போது, வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோ பூட்டு உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ஒரு பவுன் தோடு செட், வெள்ளி மெட்டி, ரொக்கம் 10 ஆயிரம் திருடப்பட்டதாக தெரிகிறது.
சமீபத்தில் இதே காலனி எதிர்புறம் உள்ள தேவூர் போலீஸ் எல்லையில், தூங்கி கொண்டிருத்த மூதாட்டி கழுத்தில் அணிந்திருத்த 7 பவுன் தாலிக்கொடியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். தற்போது திருட்டு நடந்த இடத்திற்கு பின்புறம் உள்ள விவசாயி ஒருவர் வீட்டில் வெளியில் கட்டி போட்டிருந்த மூன்று ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
அடுத்தடுத்து இதே பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் இப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu