மாணவிகளிடம் வாலிபர்கள் கிண்டல் செய்வதாக மக்கள் நீதி மய்யம் புகார்

மாணவிகளிடம் வாலிபர்கள் கிண்டல் செய்வதாக  மக்கள் நீதி மய்யம் புகார்
X

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் போலீசில் புகார் மனு கொடுத்தனர்.

குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில், மாணவிகளிடம் வாலிபர்கள் கிண்டல் செய்வதாக மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் தரப்பட்டது.

குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே காலை மற்றும் மாலை நேரங்களில் சில வாலிபர்கள் நின்று கொண்டு கிண்டல், கேலி செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் சொல்ல, பெற்றோர்கள் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். மாவட்ட செயலர் காமராஜ், நகர மகளிரணி செயலர் சித்ரா உள்ளிட்ட நிர்வாகிகள் மாணவிகளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என குமாரபாளையம் எஸ்.ஐ. மலர்விழியிடம் புகார் மனு கொடுத்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!