குமாரபாளையம் புத்தக கண்காட்சி ஆக.26 வரை நீட்டிப்பு

குமாரபாளையம் புத்தக கண்காட்சி ஆக.26   வரை நீட்டிப்பு
X

 குமாரபாளையம் புத்தக கண்காட்சி.( புதிய தாலுக்கா அலுவலகம் எதிரில்,)

குமாரபாளையம் புத்தக கண்காட்சி ஆக.26 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் புதிய தாலுக்கா அலுவலகம் எதிரில் புத்தக கண்காட்சி ஆக. 11ல் துவக்கப்பட்டது.

இது ஆக. 20ல் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இங்கு தினமும் புத்தகங்கள் வாங்க வரும் புத்தக ஆர்வலர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பல தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் வந்து ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். எழுத்தாளர்கள், கவிஞர்கள் இந்த புத்தக திருவிழா தொடங்கியது அறிந்து, இங்கு வருகிறார்கள்.

ஈரோடு புத்தக கண்காட்சி நடைபெறாததால், வழக்கமாக அங்கு செல்லும் புத்தக ஆர்வலர்கள் தங்கள் குடும்பத்துடன் இங்கு வந்து புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.

இவர்களின் வேண்டுகோளை ஏற்று ஆக. 26 வரை இந்த புத்தக கண்காட்சி செயல்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் பயன்பெற வேண்டுகிறோம். இவ்வாறு புத்தக கண்காட்சியை நடத்தும் அமைப்பினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!