குமாரபாளையத்தில் புதிய தாலுகா அலுவலகம் எதிரில் புத்தக கண்காட்சி தொடக்கம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் புத்தக கண்காட்சி திறப்பு விழா நடைபெற்றது.
ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா, இலக்கிய சொற்பொழிவுகள் நடப்பது வழக்கம். இந்த புத்தக திருவிழாவிற்கு குமாரபாளையம், பள்ளிபாளையம், பவானி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தவறாமல் செல்வது வழக்கம். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரு ஆண்டுகளாக புத்தக திருவிழா நடைபெறவில்லை.
இதன் விளைவாக, குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் புத்தக கண்காட்சி திறக்கப்பட்டது. இந்த புத்தக திருவிழா புதிய தாலுகா அலுவலகம் எதிர்புறம் உள்ள கட்டிடத்தில் நடக்கிறது. விழாவில் கோவை தாய் சேய் நல மைய அலுவலர் வள்ளியம்மாள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று திறந்து வைத்தார். முதல் விற்பனையை எக்ஸல் கல்லூரி துணை தலைவர் மதன்கார்த்திக் தொடங்கி வைத்தார். நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் நூலகப் பயன்பாட்டுக்காக ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள நூல்களை பெற்றுக்கொண்டார்.
இது பற்றி, விடியல் ஆரம்பம் பிரகாஷ் கூறியதாவது : இந்த புத்தக கண்காட்சியில் வாங்கப்படும் புத்தகங்களுக்கு 10 முதல் 20 சதவீத தள்ளுபடி உண்டு. இந்த கண்காட்சி புதிய தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள கட்டிடத்தில் ஆக.20 வரை காலை 09:30 மணி மாலை 05:00 மணி வரை நடைபெறும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu