போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்
X

குமாரபாளையம் போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.

குமாரபாளையம் போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் ரத்த தான முகாம்

குமாரபாளையம் போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.

குமாரபாளையம் போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் சங்கம், குமாரபாளையம் அரிமா சங்கம், ஈரோடு சுப்ரீம் அரிமா ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் சங்க தலைவர்கள் தம்பிதுரை, சரவணகுமார் தலைமையில் நடந்தது. இதில் 75க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் வழங்கினர். சங்க தலைவர்கள் கூறியதாவது:

மனித நேய வெளிப்பாட்டின் மிகச்சிறந்த அடையாளம் ரத்ததானம். ஒருமுறை செய்யும் ரத்ததானத்தின் மூலம் மூன்று உயிர்கள் காக்கப்படுகின்றன. ஒவ்வொருவர் உடலிலும் தோராயமாக 5 லிட்டர் ரத்தம் உள்ளது, நாம் தானம் செய்யும் 350 மில்லி லிட்டர் ரத்தம் 24 மணி நேரத்தில் மீண்டும் உற்பத்தி செய்யப்படுகிறது, ரத்ததானம் செய்தவுடன் வழக்கம் போல் அன்றாட வேலைகளை செய்யலாம். 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆரோக்கியமான நிலையில் உள்ள அனைவரும் ரத்ததானம் செய்யலாம், ரத்ததானம் செய்பவர்கள் குறைந்தபட்சம் 48 கிலோ எடை இருக்க வேண்டும்.3 மாத இடைவெளியில் ரத்ததானம் செய்வோருக்கு மாரடைப்பு மற்றும் இருதய நோய்கள் வரும் வாய்ப்பு குறைவு.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ரத்ததானாம் செய்வோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் போட்டோ சங்க செயலர் மாதேஸ்வரன், பொருளர் நடராஜன், அரிமா சங்க செயலர் அண்ணாமலை, பொருளர் ஆறுமுகம் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!