ரோட்டரி மற்றும் மத்திய லயன்ஸ் சங்க இலவச கண் சிகிச்சை, ரத்ததான முகாம்

ரோட்டரி மற்றும் மத்திய லயன்ஸ் சங்க இலவச கண் சிகிச்சை, ரத்ததான முகாம்
X

குமாரபாளையம் ரோட்டரி சங்கம், மத்திய லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் ரோட்டரி சங்கம், மத்திய லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் ரோட்டரி சங்கம், மத்திய லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் ரத்ததான முகாம்கள், ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார், மத்திய லயன்ஸ் சங்க தலைவர் லிவிகுமார் தலைமையில் நடைபெற்றது. ரத்ததான முகாமை ரோட்டரி ஆளுநர் நடேசன், கண் சிகிச்சை முகாமை லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் விஜயகுமார் துவக்கி வைத்தனர்.

ரோட்டரி சங்க துணை ஆளுநர் அர்த்தநாரிஈஸ்வரன், மாவட்ட தலைவர் சிவசுந்தரம், நிர்வாகிகள் சீனிவாசன், வெங்கடேஸ்வர குப்தா, சந்திரசேகரன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சண்முகசுந்தரம், தில்லை நடராஜன்,நாகராஜன், சுப்பிரமணியம், பாலகிருஷ்ணன், நஞ்சப்பன், உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர். ஐ.ஒ.எல். அறுவை சிகிச்சைக்கு 34 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 50 நபர்கள் ரத்ததானம் வழங்கினர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்