குமாரபாளையத்தில் கண் சிகிச்சை முகாம், ரத்ததான முகாம்

குமாரபாளையத்தில் கண் சிகிச்சை முகாம், ரத்ததான முகாம்
X

முகாமில் பயனாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

குமாரபாளையத்தில் கண் சிகிச்சை முகாம், ரத்த தான முகாம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், ஈரோடு உப்பிலியநாயக்கர் சமூக நலம் மற்றும் கல்வி மையம், ஈரோடு அரசன் கண் மருத்துவமனை, அகில பாரத ஐயப்பா சேவா சங்கம், தளபதி லயன் சங்கம் இணைந்து கண் சிகிச்சை முகாம், ரத்த தான முகாம் ஆகியவற்றை பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமையில் நடத்தின.

இதில், சங்க தலைவர் சண்முகசுந்தரம் முகாமினை துவக்கி வைத்தார். இதில் 32 பேர் ஐ.ஒ.எல் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். 42 பேர் ரத்ததானம் வழங்கினர். நிர்வாகி கோகுல்நாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai marketing future