ஏசியன் சங்கம் சார்பில் பவானி லட்சுமி நகரில் ரத்ததான முகாம்

ஏசியன் சங்கம் சார்பில்  பவானி லட்சுமி நகரில் ரத்ததான முகாம்
X

ஏசியன் சங்கம் சார்பில் பவானி லட்சுமி நகரில் நடைபெற்ற ரத்த தான முகாம்.

ஏசியன் சங்கம் சார்பில், பவானி லட்சுமி நகரில் நடந்த ரத்ததான முகாமில், பலரும் ஆர்வமுடன் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.

பவானி, லட்சுமி நகரில் உள்ள ஏசியன் சங்கம், தமிழ்நாடு தன்னார்வ ரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் பல்வேறு சேவைப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில் நேற்று, சர்வதேச தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
இதுபற்றி ராதாகிருஷ்ணன் கூறுகையில், ரத்ததானம் செய்வதால் மாரடைப்பு வருவது குறைகிறது, ரத்த புற்றுநோய் வராமல் தடுக்கிறது, ரத்த அழுத்தம் சீராக இருக்கும், ஹீமோகுளுயின் சீராக இருக்கும், கொழுப்பு சத்து குறைகிறது, ரத்த வெள்ளை அணுக்கள் அதிகரிக்கும். எனவே, பலரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்றார்.
இந்த முகாமில், 42 பேர் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர். டாக்டர் பிரேம்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்ததானம் பெரும் பணியில் ஈடுபட்டனர். நிர்வாகிகளான திட்ட ஒருங்கிணைப்பாளர் அரசு வக்கீல் குமரேசன், திட்ட தலைவர் சரவணபவன், சங்க தலைவர் வெங்கடாசலம், செயலர் ராஜேந்திரன், பொருளர் தமிழரசு உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!