காவிரி வெள்ள பாதிப்பு மக்களுக்கு நிரந்தர வீடு வழங்க பா.ஜ.க. கோரிக்கை

காவிரி வெள்ள பாதிப்பு மக்களுக்கு நிரந்தர வீடு வழங்க பா.ஜ.க. கோரிக்கை
X

குமாரபாளையம் காவிரி வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முன்னாள் துணை சபாநாயகர் துரைசாமி வெள்ள பாதிப்பு கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் நிரந்தர வீடு வழங்க கோரினார்.

காவிரி வெள்ள பாதிப்பு மக்களுக்கு நிரந்தர வீடுகள் தர முன்னாள் துணை சபாநாயகர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்தார்.

காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் குமாரபாளையம் கரையோர வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை நேரில் சந்தித்து முன்னாள் துணை சபாநாயகரும், பா.ஜ.க. மாநில துணை தலைவருமான துரைசாமி ஆறுதல் கூறினார். பின்னர் மாவட்ட வெள்ள பாதிப்பு கண்காணிப்பாளரும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன மேலாண்மை இயக்குனருமான மகேஸ்வரன் ஆய்வு செய்ய ஐயப்பா மண்டபத்திற்கு வந்தார். அப்போது துரைசாமி, மகேஸ்வரனிடம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வாக மாற்று இடத்தில் வீடுகள் வழங்க கேட்டுக்கொண்டார்.

மகேஸ்வரனுடன் நகராட்சி கமிஷனர் விஜயகுமார், பொறியாளர் ராஜேந்திரன், நில அளவை தாசில்தார் சசிகலா, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.க்கள் முருகன், தியாகராஜன், செந்தில்குமார் பங்கேற்றனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!