விருது பெற்ற குமாரபாளையம் இன்ஸ்பெக்டருக்கு பா.ஜ.க. பாராட்டு
மாவட்ட கலெக்டரிடம் விருது பெற்ற குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவிக்கு பா.ஜ.க. சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Tamil Nadu BJP News - குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ரவி. திருட்டு சம்பவங்கள் குறைப்பு, திருடப்பட்ட பணம், நகை மீட்பு, போதை பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக தடுக்க தீவிர முயற்சி, உள்ளிட்ட எண்ணற்ற செயல் திறனுக்காக நாமக்கல்லில் நடந்த 75வது சுதந்திர தின விழாவில் இன்ஸ்பெக்டர் ரவிக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
இதே போல் இதே போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வரும் சீனிவாசனுக்கும் பணி திறமையை பாராட்டி கலெக்டர் சான்றிதழ் வழங்கினார். இவர்களை பா.ஜ.க. சார்பில் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சரவணராஜன் தலைமையில் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில் பொதுநல அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் தங்கவேல், பா.ஜ.க.நிர்வாகிகள் சுகுமார், இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu