சாலை புதுப்பிக்க கோரி குமாரபாளையம் நகராட்சி ஆணையரிடம் பா.ஜ.க. மனு

சாலை புதுப்பிக்க கோரி குமாரபாளையம் நகராட்சி ஆணையரிடம்   பா.ஜ.க. மனு
X

குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் சாலை புதுப்பிக்க கோரி நகராட்சி கமிஷனர் (பொ) ராஜேந்திரனிடம் புகார் மனு கொடுத்தனர்

குமாரபாளையம் நகராட்சி ஆணையரிடம் சாலை புதுப்பிக்க கோரி பா.ஜ.க.வினர் புகார் மனு கொடுத்தனர்.

குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் சாலை புதுப்பிக்க கோரி நகராட்சி கமிஷனர் (பொ) ராஜேந்திரனிடம் புகார் மனு கொடுத்தனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

ராஜராஜன் நகரிலிருந்து பாலிக்காடு செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த வழியாக நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் அரசு ஆண்கள், பெண்கள், பள்ளிக்கு சென்று வருவதுடன், பல நூறு தொழிலாளர்கள் விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட பல வேலைகளுக்கு சென்று வருகிறார்கள். தொழில் நிறுவனங்களுக்கு நூல்கள் கொண்டு வரவும், உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகள் டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு செல்லவும் சிரமமாக உள்ளதால் இந்த சாலையை புதுப்பித்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதில் நகர தலைவர் கணேஷ்குமார், நகர பொது செயலர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள் வாணி பிரபா, சண்முகராஜன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்