பா.ஜ.க. முன்னாள் நிர்வாகியை மீண்டும் கட்சி பணியாற்ற அழைத்த முன்னாள் பா.ஜ.க. நிர்வாகிகள்

பா.ஜ.க. முன்னாள் நிர்வாகியை மீண்டும் கட்சி பணியாற்ற அழைத்த முன்னாள் பா.ஜ.க. நிர்வாகிகள்
X

பா.ஜ.க. முன்னாள் மாவட்ட செயலர் ஓம் சரவணாவை குமாரபாளையம் பா.ஜ.க நிர்வாகிகள் சந்தித்தனர்.

பா.ஜ.க. முன்னாள் மாவட்ட செயலரை குமாரபாளையம் பா.ஜ.க நிர்வாகிகள் சந்தித்து, மீண்டும் கட்சிப்பணியாற்றி, பா.ஜ.க. வெற்றிக்கு துணையாக இருக்க கேட்டுக்கொண்டனர்.

பா.ஜ.க. முன்னாள் மாவட்ட செயலரை, குமாரபாளையம் பா.ஜ.க நிர்வாகிகள் சந்தித்து, மீண்டும் கட்சிப்பணியாற்றி, பா.ஜ.க. வெற்றிக்கு துணையாக இருக்க கேட்டுக்கொண்டனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையின் போது நடந்த பொதுக்கூட்டத்தில் நாமக்கல் ஒருங்கிணைந்த முன்னாள் மாவட்ட செயலர் ஓம் சரவணா பங்கேற்றார். பாரத பிரதமர் மோடியின் திட்டங்களை நிறைவேற்றிட, மாவட்ட பா.ஜ.க. நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற முன்வந்த ஓம் சரவணாவிற்கு பா.ஜ.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். நகர முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியம், முன்னாள் மாவட்ட செயலர் சுகுமார், முன்னாள் நகர பொதுச்செயலாளர் . தனசேகரன், முன்னாள் மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் குமாரபாளையம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின்படி, பா.ஜ.க.வினர் அந்தந்த பகுதி பொது இடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளுங்கள் என்றதன்படி,குமாரபாளையம் பா.ஜ.க.வினர் மாவட்ட பொது செயலர் சரவணராஜன் தலைமையில், கோட்டைமேடு பஸ் நிறுத்தத்தில் தூய்மை பணி மேற்கொண்டனர். இதில் கட்சியினர் பஸ் நிறுத்தத்தில் இருந்த பழைய சாமான்கள் அகற்றி, ஒட்டடை அடித்து, தூய்மையாக பெருக்கி, சாணம் போட்டு பூசியும் விட்டனர். இவர்கள் சேவையை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர். இதில் நிர்வாகி ராஜா, சரவணன், சேகர் உள்பட பலர் பங்கேற்றனர். இது போல் ஒவ்வொரு பகுதியும் தூய்மை பணி மேற்கொள்வோம் என பா.ஜ.க.வினர் கூறினர்கள்.

மக்கள் நலனிற்கு எதிராகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் தி.மு.க. அரசை கண்டித்து 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி குமாரபாளையத்தில் ஒரே நேரத்தில் 33 வார்டுகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தினசரி காய்கறி மார்க்கெட் எதிரில் நடந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட பொது செயலர் வக்கீல் சரவணராஜன் தலைமை வகித்தார்.அவர் பேசியதாவது:

பிரச்சார சமயத்தில் அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் வழங்குவதாக கூறிவிட்டு, இப்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் என்பது தி.மு.க.அரசின் ஏமாற்று வேலை, மத்திய அரசு திட்டமான வீடு கட்டும் திட்டம் மாநில அரசின் திட்டமாக பொய் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ஆறுகள் தோறும் தடுப்பணை என்று சொல்லிவிட்டு தற்போது அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் உள்ளது.

கனிமவள கொள்ளை மாநிலம் முழுதும் நடந்து வருகிறது. அங்கன்வாடி மையங்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. குமாரபாளையத்தில் நன்றாக இருக்கும் பஸ் ஸ்டாண்ட் கட்டிடத்தினை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது அவசியமற்றது, புதிதாக கட்டப்பட்ட மார்க்கெட் கட்டிடம் தரமில்லாமல் கட்டப்பட்டு உள்ளது குறித்து அனைவரும் அறிவார்கள்.

கள்ள சாராயம், கஞ்சா, ஒரு நெம்பர் லாட்டரிகளை தடுக்க முடியவில்லை, சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், தக்காளி உள்ளிட்ட உணவு பொருட்கள் விலை உயர்வை தி.மு.க. அரசு தடுக்க வேண்டும், மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வினால் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்து கோவில்களை இடிக்கும் தி.மு.க. அரசின் மத விரோத போக்கு கண்டிக்கத்தக்கது, பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும், அரசு மருத்துவ மனைகளில் போதிய டாக்டர்கள், பணியாளர்கள் நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!