பள்ளிபாளையத்தில் பா.ஜ.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
பள்ளிபாளையம் அருகே பா.ஜ.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளிபாளையம் அருகே பா.ஜ.க. சார்பில் தேவலாயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு திருவிழா ஈக்காட்டூர் சர்ச்சில் நடைபெற்றது. மண்டல் தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் டேவிட் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் கலந்து கொண்டார். பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணமுத்து மற்றும் வழக்கறிஞர் தங்கவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சி சகல மதங்களையும் சமமாக மதிக்கிறது. அனைத்து ஜாதி மத மக்களையும் எந்தவித பாகுபாடும் காட்டாமல் அவர்களுக்கான நன்மைகளை பாரதிய ஜனதா கட்சி முன்னெடுக்கிறது என்றும் மாவட்டத் தலைவர் ராஜேஷ் குமார் தனது சிறப்பு உரையில் கூறினார். நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, பகுதி வாழ் மக்கள் அனைவரும் கொண்டாடினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணைத்தலைவர் டேவிட், வழக்கறிஞர் தங்கவேல் ஆகியோர் செய்திருந்தனர். பொதுச்செயலாளர் கோபால் நன்றி கூறினார்.
இதையடுத்து நேரு நகர் பெந்தகொஸ்தே சபை சர்ச்சில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பொது செயலாளர் சரவணராஜன் தலைமையில் அனைவரும் பங்கேற்றனர். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து, ஜபம் நிகழ்ச்சியை நடத்தினர். பின்னர் கேக் கட் செய்து அனைவருக்கும் வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu