குமாரபாளையத்தில் பா.ஜ.க. மகளிரணி ஆலோசனை கூட்டம்; தீர்மானங்கள் நிறைவேற்றம்

குமாரபாளையத்தில் பா.ஜ.க. மகளிரணி ஆலோசனை கூட்டம்; தீர்மானங்கள் நிறைவேற்றம்
X

குமாரபாளையம் பா.ஜ.க. மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தலைவி சத்யாபானு பேசினார்.

குமாரபாளையத்தில் பா.ஜ.க. மகளிரணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தகவல் பரவியதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் ஆலோசனை கூட்டம் நடத்தி தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், குமாரபாளையம் பா.ஜ.க. மகளிரணி ஆலோசனை கூட்டம் நகர தலைவி வாணி தலைமையில் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மகளிரணி தலைவி சத்யாபானு பங்கேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். சந்து மதுக்கடைகளை அகற்ற கோரியும் குமாரபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஜவுளி தொழில் மேன்மை பெற பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரியும், சேலம் சாலை நடைமேடைகளால் மழைநீர் செல்லாமல் குளம் போல் தேங்குவதால் அதனை சீர் படுத்தக் கோரியும், ஆனங்கூர் பிரிவு சா41லைஜயில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் நடை மேம்பாலம் அமைக்கக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் கட்சி நிர்வாகிகள் வளர்மதி, கவுரி சித்ரா, சவும்யா, சரோஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai as the future