உள்ளாட்சித் தேர்தல்: குமாரபாளையத்தில் பா.ஜ.க. சார்பில் ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல்: குமாரபாளையத்தில் பா.ஜ.க. சார்பில் ஆலோசனை கூட்டம்
X

குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்,  நகர தலைவர் ராஜு பேசினார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்ற தகவல் பரவி வரும் சூழலில் அனைத்து அரசியல் கட்சியினரும் ஆலோசனை கூட்டம் நடத்தி, தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். அவ்வகையில், குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் ஆலோசனை கூட்டம், நகர தலைவர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக, மாவட்ட தலைவர் சத்யமூர்த்தி, கூட்டத்தை துவக்கி வைத்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு 33 வார்டுகளிலும் பாடுபடுதல், ஜவுளி தொழில் மேன்மை பெற பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்; குமாரபாளையம் - சேலம் சாலை நடைமேடைகளால் மழைநீர் செல்லாமல் குளம் போல் தேங்குவதால் அதனை சீர்படுத்த வேண்டும்; ஆனங்கூர் பிரிவு சாலையில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், புதிய நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். மாவட்ட பார்வையாளர் சிவகாமி, மாவட்ட பொது செயலர்கள் நாகராஜன், சேதுராமன் , நகர துணை செயலர் இந்திரா, மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் கண்ணன்குமார், செயலர் கங்கேஸ்வரி, நகர மகளிர் அணி தலைவி கவுரி சித்ரா, சிவகாமி, பரமசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story