குமாரபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பா.ஜ.க. ஆறுதல்

குமாரபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பா.ஜ.க. ஆறுதல்
X

குமாரபாளையம் காவிரி வெள்ள பாதிப்புகளை பா.ஜ.க. மாநில துணை தலைவர்  துரைசாமி நேரில் பார்வையிட்டார்.

குமாரபாளையத்தில் காவிரி வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு பாஜக மாநில துணை தலைவர் துரைசாமி ஆறுதல் கூறினார்.

காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் குமாரபாளையத்தில் காவிரி கரையோர வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை நேரில் சந்தித்து முன்னாள் துணை சபாநாயகரும், பா.ஜ.க. மாநில துணை தலைவருமான துரைசாமி ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் பாதிக்கப்பட்டமக்களிடம் கூறும்போது உங்கள் வீடுகளின் நிலையை பார்த்தேன். வருத்தமாக உள்ளது. இதே போல் தொடர்ந்து வெள்ளம் வருவது, நீங்கள் மீண்டும் இது போல் தங்கவைக்கப்படுவது என தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. தற்காலிக உதவிகளை செய்து சமாதானம் கூறி செல்வதல்ல எங்கள் கட்சி. உங்களுக்கு நிரந்தர தீர்வாக மாற்று இடம், வீடுகள் அமைத்து தர மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வசம் பேசி வருகிறோம். விரைவில் உங்களுக்கு வீடு அமைத்து தர பிரதமர் மோடி தயாராக உள்ளார் என்றார்.

இதில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, நகர தலைவர் கணேஷ்குமார், அரசியல் தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சரவணராஜன், மாவட்ட பொது செயலர் நாகராஜன், நகர பொது செயலர் சண்முகசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture