பா.ஜ.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!

பா.ஜ.க.  கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!
X

குமாரபாளையத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆலோசனை கூட்டம் நடந்தது.

குமாரபாளையத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

குமாரபாளையத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப். 19ல் நடக்கவுள்ளது. அனைத்து அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். குமாரபாளையத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர பா.ஜ.க. தலைவர் சேகர் தலைமையில் நடந்தது.

தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்வகுமார், அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ். அணியின் மாவட்ட தலைவர் நாகராஜன், பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலர் வழக்கறிஞர் சரவணராஜன், பா.ம.க. மாவட்ட தலைவர் மூர்த்தி, உள்ளிட்ட பலர் குத்துவிளக்கேற்றி கூட்டத்தை துவக்கி வைத்தனர்.

கட்சி தலைமை அறிவித்த வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட கேட்டுக்கொள்ளுதல், பா.ஜ.க. ஆட்சி சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி, சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்தல், சுவர் விளம்பரம் எழுதுதல், வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி, வாக்காளர் பட்டியலில் உள்ளபடி, வாக்காளர்கள் அதே வீட்டில் உள்ளார்களா? அந்த வீட்டு பெண், திருமணமாகி சென்று விட்டாரா?

மகன், மகள், உயர் கல்வி கற்க, அல்லது பணிக்கு வெளியூர் சென்றுவிட்டார்களா? என்பது உள்ளிட்ட விபரங்கள் சேகரித்து, வெளியூரில் இருப்பவர்கள் வசம் தேர்தல் நாளில் வந்து விட கேட்டுக்கொள்ளுதல், பூத் சிலிப் வழங்கப்பட்டதா? என உறுதி படுத்திக்கொள்ளுதல் ஆகியன குறித்து மூத்த நிர்வாகிகள் ஆலோசனை வழங்கினர். இதில் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai solutions for small business