குமாரபாளையம் புத்தக கண்காட்சியில் தீரர் சத்தியமூர்த்தி பிறந்த நாள் விழா

குமாரபாளையம் புத்தக கண்காட்சியில் தீரர் சத்தியமூர்த்தி  பிறந்த நாள் விழா
X

குமாரபாளையம் புத்தக கண்காட்சியில் விடியல் ஆரம்பம் சார்பில் தீரர் சத்தியமூர்த்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் புத்தக கண்காட்சியில் தீரர் சத்தியமூர்த்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர்கள், அறிவியல் கண்டுபிடிப்பு சாதனையாளர்கள், பிரபல அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரது பிறந்த நாள் விழாக்கள் மாணவ, மாணவியர்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக குமாரபாளையம் புதிய தாலுக்கா அலுவலகம் எதிரில் புத்தக கண்காட்சியில் தீரர் சத்தியமூர்த்தி பிறந்த நாள் விழா அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.

சத்தியமூர்த்தியின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு புத்தங்கங்கள், முக கவசங்கள், கிருமிநாசினி மருந்துகள் வழங்கப்பட்டன.


இதில் பிரகாஷ் பேசுகையில்,

சத்தியமூர்த்தி காங்கிரஸ் அரசியல்வாதி மற்றும் இந்திய விடுதலை வீரர். இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகள் ஆழமாக வேரூன்ற பாடுபட்டவர்.

தமிழக காங்கிரசின் வளர்ச்சிக்கும் பிரித்தானிய இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி வெற்றிபெறவும் உழைத்தவர்.

அவரது பங்காற்றலை நினைவுகூறுமுகமாக சென்னையிலுள்ள காங்கிரசு கட்சியின் தமிழகத் தலைமையகம் அவரது பெயர்கொண்டு சத்தியமூர்த்தி பவன் என அழைக்கப்படுகிறது.

1939ஆம் ஆண்டு சென்னை மேயராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற அந்தநேரத்தில் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. அதனைத் தீர்க்க பிரித்தானிய அரசுடன் போராடி பூண்டி நீர்தேக்கத்திற்கான வரைவு ஒப்புமை பெற்று தமது குறுகிய ஓராண்டு பணிக்காலத்திலேயே அதன் அடிக்கல்லை நாட்டினார்.

ஆயினும் 1944ஆம் ஆண்டு இந்த நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டபோது இவர் உயிருடன் இல்லை. இவரது முதன்மை சீடரான காமராஜர் பின்னர் இத்தேக்கத்திற்கு இவரது பெயரையே வைத்தார். இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சண்முகசுந்தரம், பாண்டியன், மணிகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story