அரசு கலைக்கல்லூரியில் கணிதமேதை ராமானுஜம் பிறந்தநாள் விழா

அரசு கலைக்கல்லூரியில் கணிதமேதை ராமானுஜம் பிறந்தநாள் விழா
X

குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற கணிதமேதை ராமானுஜம் பிறந்தநாள் விழாவில் கல்லூரி முதல்வர் ரேணுகா பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் கணிதமேதை ராமானுஜம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதமேதை ராமானுஜம் பிறந்தநாள் விழா கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் கொண்டாடப்பட்டது. கணிதவியல் துறை தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்ட பலரும் ராமானுஜம் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கொரோனா வராமல் பாதுகாப்பது எப்படி? என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அனைவருக்கும் முக கவசங்கள், கிருமிநாசினி மருந்து வழங்கப்பட்டன.

ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் கீர்த்தி, தமிழ்த்துறை உதவி பேராசிரியர்கள் திருமூர்த்தி, வாசுதேவன், விரிவுரையாளர்கள் சோமசுந்தரம், அருள் சின்னப்பன், பூங்குழலி, உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள். கணிதவியல் மாணவி திருவேணி நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!