குமாரபாளையம் அருகே முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாட்டம்

குமாரபாளையம் அருகே முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாட்டம்
X

குமாரபாளையம் அருகே ஒன்றிய பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வக்கீல் தங்கவேல் தலைமையில் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் அருகே பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே வடக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வழக்கறிஞர் தங்கவேல் தலைமையில் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் ராஜம் தியேட்டர் அருகே நடந்த விழாவில், வாஜ்பாய் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் சதீஷ்குமார், வெங்கட்ராமன், கவுதமன் தீபக், சரண்யா, தங்கவேலு உள்பட பலர் பங்கேற்றனர்.

பள்ளிபாளையம் பிரிவு சாலையில் மாவட்ட பொது செயலர் வக்கீல் சரவணராஜன் தலைமையில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தூய்மைப்பணியில் பா.ஜ.க.வினர்

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உத்திரவின்படி, பா.ஜ.க.வினர் அந்தந்த பகுதி பொது இடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளுங்கள் என்றதன்படி,குமாரபாளையம் பா.ஜ.க.வினர் மாவட்ட பொது செயலர் சரவணராஜன் தலைமையில், கோட்டைமேடு பஸ் நிறுத்தத்தில் தூய்மை பணி மேற்கொண்டனர்.

இதில் கட்சியினர் பஸ் நிறுத்தத்தில் இருந்த பழைய சாமான்கள் அகற்றி, ஒட்டடை அடித்து, தூய்மையாக பெருக்கி, சாணம் போட்டு பூசியும் விட்டனர். இவர்கள் சேவையை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர். இதில் நிர்வாகி ராஜா, சரவணன், சேகர் உள்பட பலர் பங்கேற்றனர். இது போல் ஒவ்வொரு பகுதியும் தூய்மை பணி மேற்கொள்வோம் என பா.ஜ.க.வினர் கூறினர்.

Tags

Next Story
ai in future agriculture