குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை வாலிபருக்கு பைக் பரிசு

குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை வாலிபருக்கு பைக் பரிசு
X

குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டி.

குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறப்பாக மாடுகளை பிடித்த மதுரை வாலிபருக்கு சிறப்பு பரிசாக பைக் வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக மாடுகளை பிடித்த மதுரை வாலிபருக்கு சிறப்பு பரிசாக பைக் வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மதுரையை சேர்ந்த வாலிபர் ஜெகதீசன் 9 மாடுகளை பிடித்த சாதனைக்காக ஹீரோ பைக் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது.

அழகப்பம்பாளையம் கார்த்தி என்ற வாலிபர் 8 மாடுகள் பிடித்தமைக்காகவும், அழகப்பம்பட்டி அடைக்கண் என்ற வாலிபர் 8 மாடுகள் பிடித்தமைக்காகவும் சிறப்பு பரிசு பெட்டகத்தை பரிசாக பெற்றனர். பிடிபடாமல் சிறப்பாக விளையாடியமைக்காக புதுக்கோட்டை எஸ்.ஐ. அனுராதாவின் மாட்டிற்காக ஹீரோ பைக் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. ஓலப்பாளையம் ராஜா, மேலூர் குணா ஆகியோரது மாடுகளுக்காக சிறப்பு பரிசு பெட்டகத்தை பரிசாக பெற்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்