குமாரபாளையம் அருகே பூமி பூஜை: முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

குமாரபாளையம் அருகே பூமி பூஜை: முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
X

குமாரபாளையம் அருகே டீச்சர்ஸ் காலனி பகுதியில் பூமி பூஜையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.

குமாரபாளையம் அருகே பூமி பூஜையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.

குமாரபாளையம் அருகே பூமி பூஜையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட அருவங்காடு, வீ. மேட்டூர், உப்புக்குளம், பொன்னி நகர், டீச்சர்ஸ் காலனி, வாசுகி நகர், ஓலைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அங்கன்வாடி மைய கட்டிடம், வடிகால், கான்கிரீட் தளம், மேல்நிலை நீர் தேக்க தொட்டி, உணவு கூட கட்டிடம், பொதுக்கழிப்பிடம் உள்ளிட்ட பணிகள் நடைபெற பூமி பூஜை போடபட்டது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவி புஷ்பா, ஒன்றிய செயலர்கள் செந்தில், குமரேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பள்ளிபாளையம் பகுதியில் ஆலாம்பாளையம், காடச்சநல்லூர், கொக்கராயன்பேட்டை, எலந்தகுட்டை, ஒடப்பள்ளி, பாப்பம்பாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் பூமி பூஜை போடப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!