பாலம் கட்டும் பூமி பூஜையில் பங்கேற்ற அர்ச்சகருக்கு எம்.பி. கணேசமூர்த்தி அறிவுரை

குமாரபாளையம் பெரியார் நகர், நாராயண நகர் இணைப்பு பகுதியில் உள்ள கோம்பு தரை மட்ட பாலம் பூமி பூஜையில் ஈரோடு எம்.பி, கணேசமூர்த்தி பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்.
குமாரபாளையம் பெரியார் நகர், நாராயண நகர் இணைப்பு பகுதியில் உள்ள கோம்பு தரை மட்ட பாலம் மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு பயன்படாத நிலை ஏற்பட்டது.
இதை புதியதாக கட்ட பல தரப்பினர் கோரிக்கை விடுத்ததின் பேரில், நேற்று இதன் பூமி பூஜை நடைபெற்றது. நகர ம.தி.மு.க. செயலர் நீலகண்டன் தலைமை வகித்தார். ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி பங்கேற்று பூஜை பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார்.
முன்னதாக அருகில் இருக்கும் கற்பக விநாயகர் கோவிலுக்கு சுவாமி கும்பிட விழா ஏற்பாடு குழுவினர் எம்.பி. யை அழைத்து சென்றனர். அர்ச்சகர் வரதராஜன் சம்ஸ்கிருத மொழியில் அர்ச்சனை செய்தார். அவரை அழைத்த எம்.பி., எந்த வகுப்பை சேர்ந்தவர் என்று கேட்க, அர்ச்சகர் நான் செட்டியார் என்று கூறினார். எந்த மொழியில் அர்ச்சனை செய்தீர்? என்று கேட்க, சமஸ்கிருத மொழியில் செய்தேன் என்று அர்ச்சகர் சொல்ல, ஏன் தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது? என்று எம்.பி., கேட்டார்.
அதனை கேட்ட அர்ச்சகர் தமிழில் கூட செய்யலாம் என்றார். தமிழில் செய்யுங்கள் என்று சொல்ல, அர்ச்சகர் மீண்டும் தமிழில் அர்ச்சனை செய்தார். தொடர்ந்து தமிழிலேயே அர்ச்சனை செய்யுங்கள் என்று எம்.பி. கூறினார்.
பூமி பூஜை விழாவில் பங்கேற்ற நகராட்சி கமிஷனர் சசிகலா கூறுகையில், இந்த பாலம் 2019, 2020ம் ஆண்டு எம்.பி. நிதி ஒதுக்கீட்டில் 24 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ளது என்றார்.
இதில் தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம், ம.தி.மு.க. முன்னாள் நகர தி.மு.க. செயலர் வெங்கடேசன், ஈரோடு மாநகர, மாவட்ட ம.தி.மு.க. செயலர் முருகன், மாவட்ட ம.தி.மு.க. செயலர் கணேசன், தி.மு.க. நிர்வாகிகள் அன்பழகன், ஒ.ஆர்.எஸ். எனப்படும் செல்வராஜ், விஜய்கண்ணன், ராஜ்குமார், ஆனந்தன், மீனாட்சி சுந்தரம், வெங்கடேசன், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu