குமாரபாளையத்தில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்ட பூமி பூஜை...

குமாரபாளையம் காவேரி நகரில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவேரி நகர் பத்திரகாளியம்மன் கோவில் எதிர் வீதியில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தது வந்தனர். பொதுமக்கள் மற்றும் வார்டு கவுன்சிலர் கிருஷ்ணவேணி வேண்டுகோள்படி மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பூமி பூஜை நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், திமுக மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், கவுன்சிலர் பரிமளம், நிர்வாகிகள் செந்தில், சரவணன், விக்னேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். நீண்ட நாள் கோரிக்கையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட உள்ளதால் அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியவாதவது:
மாநிலத்தின் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்துவதும், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கடமையாகும். அந்த வகையில் குமாரபாளையம் நகராட்சி பகுதியில் சேர்மன் விஜய் கண்ணன் முயற்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது.
மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது, காவேரிநகர் பத்திரகாளியம்மன்கோவில் எதிர் வீதியில் மக்கள் வசதிக்காக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டப்படுகிறது.
கட்டுமானப் பணிகள் விரைவில் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதன் மூலம் மக்களுக்கு குடிநீர் எளிதாக கிடைக்கும் என்றும் மக்கள் தண்ணீர் குறித்து இனிமேல் கவலை பட வேண்டாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu