குமாரபாளையம் பகுதியில் மழைநீர் வடிகால், கான்கிரீட் சாலைக்கு பூமி பூஜை

குமாரபாளையம் பகுதியில் மழைநீர் வடிகால், கான்கிரீட் சாலைக்கு பூமி பூஜை
X

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி  பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். 

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.


குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் தட்டான்குட்டை, குளத்துக்காடு, குப்பாண்டபாளையம், பல்லக்காபாளையம், எலந்தகுட்டை, பாதரை, காடச்சநல்லூர், கொக்கராயன்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் வடிகால், கான்கிரீட் சாலை, பொதுநூலகம், உள்ளிட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. ஒசுவன்காடு, முனியப்பன் கோவில் பகுதிகளில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிகள் திறப்பு விழா நடந்தது.

இதில் குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி பங்கேற்று பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்ததுடன், கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிகளை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார். இதில் வடக்கு, தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர்கள் செந்தில், குமரேசன், தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!