பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை
X

 பவானி காளிங்கராயன் அணைக்கட்டிலிருந்து உபரிநீர் பெருக்கெடுத்து செல்கிறது.

பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் முழுமையாக திறக்கபட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பவானி ஆற்றின் இறுதியில் உள்ள காளிங்கராயன் அணைக்கட்டுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அணையில் இருந்து உபரி நீராக வினாடிக்கு 3,756 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றுக்கு வெளியேறி சென்று வருகிறது.

மேலும் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை நீரும் சேர்ந்துள்ளதால் தண்ணீர் செந்நிறத்தில் காணப்படுகிறது. பவானி சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சுமார் 90 கி.மீ. தொலைவில் உள்ள பவானி காளிங்கராயன் அணைக்கட்டுக்கு வந்தடைந்தது. இங்கிருந்து வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் முழு அளவில் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!