இன்று முதல் பவானி - குமாரபாளையம் பாலம் மீண்டும் திறப்பு : வாகன ஓட்டிகள் உற்சாகம்

இன்று முதல் பவானி -  குமாரபாளையம் பாலம் மீண்டும் திறப்பு :  வாகன ஓட்டிகள் உற்சாகம்
X

பவானி- குமாரபாளையம் இணைப்பு பாலம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டதால், மக்கள் சென்று வருவதை படத்தில் காணலாம்.

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட பவானி - குமாரபாளையம் இணைப்பு பாலம், தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், ஈரோடு மாவட்டம் பவானியை இணைக்கும் முக்கிய பகுதியாக குமாரபாளையம் பவானி பாலம் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக இரண்டு மாவட்ட எல்லைகள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதன் காரணமாக, இப்பாலமானது கடந்த சில வாரங்களாகவே மூடப்பட்டிருந்தன. இதனால், வாகன ஓட்டிகள் குமாரபாளையம் பகுதியில் இருந்து பவானி செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு இன்று முதல் பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. பொது போக்குவரத்து திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து, பவானி - குமாரபாளையம் பாலமானது மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காலையில் இருந்தே வாகனங்கள் அதிகளவில் பாலத்தை கடந்து செல்கின்றன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!