காவிரியில் வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி- குமாரபாளையம் பாலம் அடைப்பு

காவிரியில் வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி- குமாரபாளையம்   பாலம் அடைப்பு
X

குமாரபாளையம், பவானி பழைய காவிரி பாலம் காவிரி வெள்ளம் காரணமாக அடைக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பவானி- குமாரபாளையம் பாலம் அடைக்கப்பட்டது.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பவானி குமாரபாளையம் இடையேயான பாலம் அடைக்கப்பட்டது.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஈரோடு மாவட்டம் பவானியை இணைக்கும் வகையில் பாலக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட பாலம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாகி வருகிறார்கள்.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபிணி அணைகள் நிரம்பியதால் அதிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. மேட்டூர் அணையும் தனது முழு கொள்ளளவு 120 அடியை எட்டியதையடுத்து கர்நாடகாவில் இருந்து வரும் உபரி நீர் அனைத்தும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுவதால் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்பொழுது காவிரி ஆற்றில் வந்து கொண்டுள்ளது.

இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள காவிரி கரை பகுதிகளான கலைமகள் வீதி இந்திரா நகர் மற்றும் அண்ணா நகர் மணிமேகலை தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 103 குடும்பத்தினர் மீட்கப்பட்டு அவர்கள் தற்பொழுது தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் ஈரோடு மாவட்டம் பவானி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தையும் இணைக்கும் வகையில் பாலக்கரை பகுதியில் கட்டப்பட்ட பழைய பாலம் பழுதின் காரணமாக அடைக்கப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை கருதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஈரோடு மாவட்டம் பவானி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகளில் தற்பொழுது உள்ள 3 பாதைகளில் ஒரு பாதை துண்டிக்கப்பட்டுள்ளதால் நீண்ட தூரம் சுற்றி சென்று, பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாகி வருகின்றனர்.

Tags

Next Story