புத்தக கண்காட்சியில் பாரதி பிறந்த நாள் விழா
குமாரபாளையம் புத்தக கண்காட்சியில் பாரதி பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் புத்தக கண்காட்சியில் பாரதி பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பாக பள்ளிபாளையம் பிரிவு சாலை சம்பூரணியம்மாள் திருமண மண்டபத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா விடியல் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இல்லம் தேடி கல்வி மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர் மகாகவி பாரதியார் வேடம் அணிந்து, நகராட்சி அலுவலகம் காந்தி சிலை அருகே இருந்து, ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்தனர். இவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்ஸ்பெக்டர் தவமணி பரிசுகளாக புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். கவுன்சிலர் அம்பிகா, சமூக சேகவி சித்ரா, பஞ்சாலை சண்முகம், தீனா, இல்லம் தேடி கல்வி தன்னார்வார்கள் ஜமுனா, சித்ரா ராணி, ராசாத்தி, உள்பட பலர் பங்கேற்றனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர். டிச. 22 வரை இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.
குமாரபாளையம் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ நடுநிலைப் பள்ளியில் விடியல் ஆரம்பம் சார்பில், மகாத்மா காந்தி பெயரில் மாலை நேர வகுப்பு துவக்கப்பட்டது. காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி பங்கேற்று, மகாத்மா காந்தி மாலை நேர பயிலக கல்வி வகுப்பை துவக்கி வைத்தார்.
இன்ஸ்பெக்டர் தவமணி பேசியதாவது:
அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதற்கு அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது. கல்வித் தரம் உயர்ந்து வருவதால் அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் உலக அளவில் நமது கல்வியாளர்கள் உயர்ந்து வருகிறார்கள். ஆகவே இந்த மாலை நேர பயிலகத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி வினா போட்டிகள் வைக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு இன்ஸ்பெக்டர் தவமணி, ஆசிரியை ஹெலன், பஞ்சாலை சண்முகம் பரிசுகள் வழங்கினர்.
மாலை நேர பயிற்சி ஆசிரியைகள் ராணி மற்றும் சித்ராவிற்கு தலைமை ஆசிரியை சுகந்தி பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu