குமாரபாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா

குமாரபாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளியில்  பாரதியார் பிறந்தநாள் விழா
X

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பாரதியார் பிறந்தநாள் விழாவில் நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கினார்.

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா தளிர்விடும் பாரதம் பொதுநல அமைப்பின் சார்பில் அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை கற்பகம் விழாவை தொடங்கி வைத்தார்.

விழாவில் மகாகவி பாரதியார் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பாரதியார் வேடமணிந்து வந்த மாணவ, மாணவியர்கள் பாரதியாரின் கவிதைகளை வாசித்தனர். பேச்சு, கட்டுரை, வினாடிவினா, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசாக புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள், 27 மாணவ, மாணவியர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.

தி.மு.க. நகர பொறுப்பாளர், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் செல்வம், முனைவர் இலக்குவன், தமிழாசிரியர் பொன்னையன், ஆதிபகவன் ராஜ்குமார், ரவி உள்பட பலர் பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினர்.

நிர்வாகிகள் வரதராஜ், ஞானசேகரன், காட்வின், மாணிக்கவேல், பழனிசாமி, தினேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!