குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா

குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
X

குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற பாரதியார் பிறந்த நாள் விழாவில் கல்லூரி முதல்வர் ரேணுகா பேசினார்.

குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் ஞானதீபன் பாரதியாரின் வாழ்வும், பாடல்களும் எனுன் தலைப்பில் பேசினார். சுதந்திரதின பொன்விழா ஆண்டினை கொண்டாடும் வகையில் மாணவிகள் பாரதியார் எழுதிய தேசபக்தி பாடல்களை பாடினார்கள்.

மேலும் பேச்சு, கட்டுரை, கவிதை, வினாடி வினா போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பாரதியாரின் கருத்துக்களை எடுத்துரைக்கும் விதமாக சிறு நாடகங்களும், பாரதியார் பாடல்களால் நாட்டிய நிகழ்சிகளும் நடைபெற்றன. விரிவுரையாளர்கள் கீர்த்தி, பூமணி, திருமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!