குமாரபாளையத்தில் திருமுறைக்கழக பரத நாட்டிய நிகழ்ச்சி

குமாரபாளையத்தில் திருமுறைக்கழக பரத நாட்டிய நிகழ்ச்சி
X

திருமுறைக்கழக 81வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி,  குமாரபாளையம் அருகே பவானி சங்கமேஸ்வரர் கோவில் மண்டபத்தில், ஈரோடு ரேவதி, அன்புக்கரசி தலைமையிலான நாட்டிய கலா ரத்னா, அன்பு நாட்டிய கலாசேத்ரா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே சங்கமேஸ்வரர் கோவிலில், திருமுறைக்கழகம் சார்பில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமுறைக்கழக 81வது ஆண்டு நிறைவு விழா, குமாரபாளையம் அருகே பவானி சங்கமேஸ்வரர் கோவில் மண்டபத்தில் ஜன. 5 முதல் ஜன. 14 வரை 10 நாட்கள், தினமும் மாலை 06:00 மணி முதல் 09:00 மணி வரை நடைபெறுகிறது.

நேற்று முன்தினம், மதுரை கூடல் ராகவன் பங்கேற்று, நல்வழி காட்டும் மார்கழி எனும் தலைப்பில் பேசினார். நேற்று ஈரோடு ரேவதி, அன்புக்கரசி தலைமையிலான, நாட்டிய கலா ரத்னா, அன்பு நாட்டிய கலாசேத்ரா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதை, கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி பார்வையாளர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்