காவிரி கரையோர பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை மனு

காவிரி கரையோர பகுதியில் தடுப்பு சுவர்   அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை மனு
X

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதி.

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க கலெக்டரிடம் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க கோரி கலெக்டரிடம் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இது பற்றி அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

ஆடி மாதம் வந்து விட்டால் குமாரபாளையம் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிற சூழ்நிலை ஏற்படும். ஆற்றில் தண்ணீர் வருவதற்கு முன் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வழங்க வேண்டும். 18வது வார்டு மணிமேகலை தெரு,கலைமகள் வீதி, இந்திராநகர், அண்ணாநகர் பகுதிகளில் காவிரிகரையோரம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிரந்தரமான குடியிருப்பு வீடுகள், குமாரபாளையம் பகுதியில் ஏற்படுத்தி தரவேண்டும், காவிரி கரையோரம் உள்ள வீடுகளை அகற்றி விட்டு, காவேரிநகர் முதல் மணிமேகலை வீதி வரை தடுப்புச்சுவர் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு குமாரபாளையம் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் புத்தர் தெரு நகராட்சி பள்ளி, நகராட்சி நடராஜா திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் பகுதியில் காவிரி கரையோர பகுதி மக்கள் மழை மற்றும் காவிரி வெள்ளத்தால் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மாற்று இடம் கேட்டுள்ளனர். விரைவில் ஏற்பாடு செய்யப்படும். விண்ணப்பங்களின் பரிசீலனை அடிப்படையில் வீடுகள் ஒதுக்கி தரப்படும் என கூறி இருந்தார்.

ஆனால் இதுவரை அது சம்பந்தமாக எவ்வித அறிவிப்பும் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!