வழக்கறிஞர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

வழக்கறிஞர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
X

குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட நீதிபதியை கண்டித்து ஏப். 18ல் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட நீதிபதியை கண்டித்து ஏப். 18ல் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குமாரபாளையம் நீதிமன்ற வளாகம் 2020, ஜூலை 18ல் துவக்கப்பட்டது. அப்போது முதல், வழக்கறிஞர்களுக்கு தனியாக ஓய்வு அறை, உணவு உண்ண அறை, ஆண் வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் உடை மாற்றும் அறை இல்லாத நிலையில், சங்க நிதியிலிருந்து இவைகளை அமைத்து கொள்ள கூட அனுமதி தரவில்லை. பொதுமக்கள் அமர்வதற்கு போதிய இருக்கைகள், பொதுமக்களுக்கான கழிப்பிடங்கள், வழக்கறிஞர்களுக்கான ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நீதிபதி அனுமதி தரவில்லை.

இதனை கண்டித்து ஏப். 15 முதல் நீதிமன்ற காலவரையற்ற பணி புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் தலைவர் சரவணராஜன் தலைமையில் நடந்தது.

இதில் சார்பு நீதிமன்றம் அமைய முன்னெடுப்பு பணிகள் எதுவும் துவங்கப்படவில்லை என்பதாலும், அடிப்படை வசதிகள் பலமுறை கேட்டும் செய்து தராததாலும், நீதிமன்ற தொடர் புறக்கணிப்பு செய்வது எனவும், ஏப். 18, காலை 10:00 மணியளவில் நீதிமன்ற வளாகம் முன்பு, மாவட்ட நீதிபதியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் சங்க செயலர் நடராஜன், பொருளர் நாகப்பன், நிர்வாகிகள் ஐயப்பன், கார்த்தி, ரமேஷ், துரைசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!