குமாரபாளையத்தில் பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்

குமாரபாளையத்தில் பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குமாரபாளையத்தில் பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேக விழா துவக்கப்பட்டது.
குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் உள்ள விடோபா சமேத பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சம்புரோஷனம் விழா நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இன்று காவிரி ஆற்றிலிருந்து திருமஞ்சன தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல், ஜூன் 15 மாலை முதல் கால யாகசாலை பூஜை, ஜூன் 16ல் இரண்டாம் கால பூஜைமற்றும் கொடிமரம் வைத்தல், மூன்றாம் கால பூஜை, ஜூன் 17 நான்காம் கால பூஜை, காலை 09:15 மணிக்கு மகா கும்பாபிஷேக விழாவையொட்டி கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுதல் நடைபெறவுள்ளது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. அதே நாள் இரவு புஷ்ப பல்லக்கில், கருட வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறவுள்ளது. விழாக்குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu