குமாரபாளையத்தில் பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையத்தில் பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேக விழா
X

குமாரபாளையத்தில் பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் உள்ள விடோபா சமேத பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சம்புரோஷனம் விழா விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. காவிரி ஆற்றிலிருந்து திருமஞ்சன தீர்த்தக்குடம் யானை மீது கொண்டுவர, பெண் பக்தர்கள் ஏராளமானோர் தீர்த்த குடங்கள் ஜண்டை மேளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

ஜூன் 15 மாலை முதல் கால யாகசாலை பூஜை, ஜூன் 16ல் இரண்டாம் கால பூஜைமற்றும் கொடிமரம் வைத்தல், மூன்றாம் கால பூஜை, நேற்று நான்காம் கால பூஜை, காலை 09:15 மணிக்கு மகா கும்பாபிஷேக விழாவையொட்டி கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுதல் வைபவம் நடைபெற்றது. ராஜ மன்னார்குடி மணவாள மாமுனிகள் பீடம் 4வது பட்டம், செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் தலைமை வகித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாக்குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!