பை தைக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு: தாலுகா அலுவலகத்தில் மனு

பை தைக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு: தாலுகா அலுவலகத்தில் மனு
X

பை தைக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு பெற்றுத்தரக்கோரி, பவானி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பவானி பகுதியில் உள்ள பை தைக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கக்கோரி, மனு அளிக்கப்பட்டது.

பவானியில் கட்டைப்பை, சுத்துப்பட்டி பை தைக்கும் தொழிலாளர்களுக்கு பை ஒன்றுக்கு ஒரு ரூபாய் கூலியும், சாதா பைக்கு 30 பைசா கூலியும், உயர்த்தி வழங்க வேண்டும் என, பவானி வட்டார கட்டைப்பை தைக்கும் தொழிலாளர்கள் சங்கம், இடது தொழிற்சங்க மையம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சங்க செயலர் கிருஷ்ணமூர்த்தி, பொருளர் சிவகாமி, கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற் கோவிந்தராஜ், நிர்வாகிகள் சிங்காரவேல், நாச்சிமுத்து உள்ளிட்டார், பவானி தாலுகா அலுவலகத்தில் அளித்த மனு விபரம்:

கட்டைப்பை, சுத்துப்பட்டி பை தைக்கும் தொழிலாளர்களள், வீடுகளிலேயே தையல் இயந்திரங்கள் மூலம் கூலிக்கு பை தைத்து குடும்ப பொருளாதாரத்தை பாதுகாத்து வருகின்றனர். இவர்களுக்கு 2016ம் வருடம் பை ஒன்றுக்கு 25 காசுகள் கூலி உயர்வு வழங்கப்பட்டது. 5 வருடமாக நரம்பு விலையேற்றம். தையல் மெசின் பராமரிப்பு செலவு அதிகரிப்பு, வீட்டு வாடகை உயர்வு, பெட்ரோல் , டீசல், சமையல் எரிவாயு விளை உயர்வு உள்ளிட்ட பொதுவான விலை உயர்வு ஏற்பட்டது.

விலைவாசி உயர்வு காரணமாக வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. எனவே பை ஒன்றுக்கு ஒரு ரூபாயும், சாதா பை ஒன்றுக்கு 30 பைசாவும் கூலி உயர்வும் வழங்க வேண்டும். இது குறித்து பை உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பெற்றுதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா