குமாரபாளையத்தில் அய்யப்பன் திருவீதி உலா…

குமாரபாளையத்தில் அய்யப்பன் திருவீதி உலா…
X

குமாரபாளையத்தில் அய்யப்பன் திருவீதி உலா.

குமாரபாளையத்தில் தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழுவின் அய்யப்பன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழுவின் 21 ஆம் ஆண்டு விழா, திருவிளக்கு பூஜை, அன்னதான ஆன்மீக பெருவிழா துவங்கியது. தொடர்ந்து, காவிரி ஆற்றில் இருந்து திருவீதி உலா செண்டை மேளதாளங்களுடன் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இதன் தொடர்ச்சியாக, கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை, திருவிளக்கு பூஜை, அன்னதான விழா நடைபெறுகிறது. இதுகுறித்து, அய்யப்ப குரு சுவாமிகள் கூறியதாவது:

அய்யப்பன், சாஸ்தா, தர்மசாஸ்தா, மணிகண்டன் ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் அய்யப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலமாக சபரிமலை விளங்குகிறது. அய்யப்பன் மோகினி (விஷ்ணு) மற்றும் சிவன் மகனாக மற்றும் அன்னை பார்வதியின் வளர்ப்பு மகனாக கருதப்படுகிறார்.

அய்யப்பன் மதங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக பாவிக்கப்படுகிறார். இன்றும் ஐயப்பனின் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் எருமேலியிலுள்ள முன்னாளில் கொள்ளைக்காரனாக இருந்து அய்யப்பனின் அருளால் திருந்தி அவரது நண்பராக மாறிய வாவர் தர்காவிற்கு சென்ற பின்னரே அய்யப்பனை தரிசிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் சாத்தனூர் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன. அங்கெல்லாம் சாஸ்தாதான் முக்கிய தெய்வமாக விளங்குகிறார். தமிழ்நாட்டில் கிராமத்துக்கு கிராமம் அய்யனார் கோயில் உள்ளது. ஆனால் கேரளத்தில் கிராம தேவதையாக இல்லாமல் வேறு விதத்தில் அய்யப்ப வழிபாடு வழக்கில் உள்ளது என குருசாமி தெரிவித்தார்.

Tags

Next Story