சபரிமலை சேவைக்கு கல்லூரி மாணவர்கள் 75 பேரை வழியனுப்பி வைத்த ஐயப்ப சேவா சங்கம்
சபரிமலை சேவைக்கு கல்லூரி மாணவர்கள் 75 பேரை அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர் வழியனுப்பி வைத்தனர்.
கேரள மாநிலம் சபரிமலை சன்னிதானத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முதல் தை மாத பிறப்பு வரை ஐயப்ப சுவாமியை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். மகர விளக்கு காலத்தில் அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்திட வேண்டி, கல்லூரி மாணவர்கள் பல கட்டங்களாக ஆயிரத்திற்கும் மேலானவர்கள் அனுப்பி வைப்பது வழக்கம்.
அதன்படி, குமாரபாளையம் ஐயப்பன் கோவிலில் இருந்து சபரிமலை சேவைக்கு பரமத்தி வேலூர் கந்தசாமி கவுண்டர் கல்லூரி மாணவர்கள் 75 பேர் சேவை செய்ய அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை வழியனுப்பும் விழா மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் நடைபெற்றது.
ஐயப்பா சேவா சங்க மாவட்ட செயலர் ஜெகதீஸ் கூறுகையில், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்திட வேண்டி, கல்லூரி மாணவர்கள் பல கட்டங்களாக ஆயிரத்திற்கும் மேலானவர்கள் அனுப்பி வைப்பது வழக்கம்.
தற்போது 4 வது கட்டமாக 75 மாணவர்கள் செல்கிறார்கள். இதன் முன்பு 3 கட்டங்களில் 260 மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் ஐயப்ப பக்தர்களுக்கு மூலிகை குடிநீர் வழங்குதல், அன்னதானம் வழங்குதல், அவசர சிகிச்சை வழங்குதல், பிராணவாயு அறையில் ஆக்சிஜன் கொடுத்தல், உயிர் நீத்தாரை அவரது உடலை சொந்த ஊரில் கொண்டு போய் சேர்த்தல், புண்ணிய பூங்காவனம் எனப்படும் ஐயப்பன் கோவில் வளாகம் முழுதும் தூய்மை படுத்தும் பணி செய்தல், என்பது உள்ளிட்ட பணிகள் செய்வார்கள். இவர்கள் 11 நாட்கள் செய்து திரும்புவார்கள். அதன் பின் அடுத்த குழுவினர் செல்வார்கள் என தெரிவித்தார்.
இதில் மாவட்ட கண்காணிப்பாளர் பிரவீன்காந்த், துணை தலைவர் மணி, தொண்டர்படை நிர்வாகி குமார், மணிகண்டன், துரைசாமி, மோகன்ராஜ், மாதேஸ், கந்தசாமி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் விமல்ராஜ், மாதவன், ஜெயஸ்ரீ, அருணாராணி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu