/* */

குமாரபாளையத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் தாசில்தார் பங்கேற்றார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
X

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்ற, போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது.

குமாரபாளையத்தில் நடைபெற்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் தாசில்தார் பங்கேற்றார்.

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்களுடன், நாமக்கல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, வருவாய்த்துறை சார்பில், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது. குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேல், கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தனர். போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி, ஒழிப்போம் ஒழிப்போம் போதை பொருட்களை ஒழிப்போம், காப்போம் காப்போம் உயிர்களை காப்போம் என கோஷமிட்டபடி முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக மாணவ, மாணவியர் சென்றனர் .

போதை பொருட்கள் ஒழிப்பு,மற்றும் போதை பொருட்களை உட் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லூரியில் இருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் கல்லூரியில் நிறைவு பெற்றது. 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர், வி.ஏ.ஒ. முருகன், உள்ளிட்ட பேராசிரியர்கள் பலரும் பங்கேற்றனர்.

குமாரபாளையம் அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் கருத்தரங்கம் முதல்வர் ரேணுகா வழிகாட்டுதலில், துறை பேராசிரியை சரவணாதேவி தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஈரோடு வாசவி கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆய்வு செய்தல் அவசியம். இதில் தகவல் குறித்து பகுப்பாய்வு செய்ய வேண்டும். இதனை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும். இதற்கு கணினி உதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு விஷயம் குறித்து மேலும் மேலும் தகவல் சேகரிப்பது தான் ஆய்வு என்பது. புதிதாக மாறிக்கொண்டே இருக்கும் உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது. இந்த ஆய்வின் மூலம் புதிய முடிவெடுக்க உதவியாக உள்ளது. இந்த ஆய்வை வணிக நிர்வாகவியல் மாணவர்கள் அடிப்படையாக மேற்கொள்ள வேண்டும். மனித வளம், நிதி மேலாண்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் போது, என்னென்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிந்து கொண்டு பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பேராசிரியர்கள் காயத்ரி, கல்யாணி, மோத்தி, பார்த்திபன், அன்புமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 13 March 2024 11:48 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...