குமாரபாளையத்தில் நீர் மாசு தடுப்பு விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில், பள்ளிக்கல்வித்துறை, தேசிய பசுமை படை மற்றும் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள் சார்பில், நீர் மாசுபடுவது தடுத்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
குமாரபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை, தேசிய பசுமை படை, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள் சார்பில் நீர் மாசுபடுவது தடுத்தல் விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட மாசுக்கட்டுபாட்டு துறை உதவி பொறியாளர் கிருஷ்ணன், தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத், என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, காந்திபுரம், ஆனங்கூர் சாலை, சேலம் சாலை, பெராந்தார் காடு, உள்ளிட்ட பல பகுதியின் வழியாக சென்ற பேரணி பள்ளியில் நிறைவுபெற்றது.
இப்பேரணியில், நீர்மாசுபடுவது குறித்த விழிப்புணர்வு கோஷங்கள் போட்டவாறும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தவாறும் மாணவர்கள் பங்கேற்றனர். மாசுக்கட்டுபாட்டு வாரிய உதவி அலுவலர்கள் கார்த்தி, லீலா வினோதன், பிரசாத், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu