குமாரபாளையத்தில் போட்டி தேர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

குமாரபாளையத்தில் போட்டி தேர்வு குறித்த  விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

 குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சார்பில் போட்டி தேர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் முனைவர் இலக்குவன் பேசினார்.

குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சார்பில் போட்டி தேர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தளிர்விடும் பாரதம் சார்பில் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சேவைப்பணிகள் செய்யபட்டு வருகிறது.

நேற்று சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் போட்டி தேர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் போட்டி தேர்வுகளில் பங்கேற்க விண்ணப்பித்தல், தேர்வினை எழுதும் முறை, இதற்கு தேவையான பாடங்கள் குறித்த விளக்கம், தேர்வில் பங்கேற்க எப்படி தயார் செய்து கொள்வது? என்பது உள்ளிட்ட பல்வேறு விளக்கங்கள் எடுத்துரைக்கப்பட்டன.

போட்டி தேர்வுகள் குறித்த கேள்விகளுக்கு அமைப்பாளர் சீனிவாசன், முனைவர் லக்குவன், கல்வியாளர்கள் செந்தில்குமார், சாந்தி, பிரபு உள்ளிட்ட பலர் விளக்கமளித்தனர். இதில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு பொது அறிவு களஞ்சியம் என்ற புத்தகம் பயிற்சிக்கு உதவியாக வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!